வெண்டைக்காய் சாம்பார்.
தேவையானவை :-
வெண்டைக்காய் - கால்கிலோ, சின்ன வெங்காயம் - 6, தக்காளி - 1, வேகவைத்த துவரம்பருப்பு - 1 கப், புளி - ஒரு நெல்லி அளவு, உப்பு - ஒரு டீஸ்பூன், சாம்பார் தூள் - 1 டேபிள் ஸ்பூன், மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன், தாளிக்க :- எண்ணெய் - 2 டீஸ்பூன், கடுகு, உளுந்து சீரகம் - தலா அரை டீஸ்பூன், பெருங்காயம் - துண்டு, கருவேப்பிலை - 1 இணுக்கு.
செய்முறை :- வெண்டைக்காயை நன்கு கழுவி துடைத்து ஒரு இஞ்ச் துண்டுகளாக வெட்டவும். வெங்காயம் தக்காளியை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். புளியை இரண்டு கப் தண்ணீரில் ஊறவைத்து சாறெடுத்து உப்பு, மஞ்சள் தூள், சாம்பார்த்தூள் சேர்க்கவும் . எண்ணெயைக் காயவைத்துக் கடுகு, உளுந்து சீரகம் தாளித்து பெருங்காயம் கருவேப்பிலை சேர்க்கவும். இதில் வெண்டைக்காயை இரு நிமிடம் வதக்கி அதன் பின் சின்னவெங்காயம் தக்காளி சேர்க்கவும். இன்னுமொரு நிமிடம் வதக்கி புளிக்கரைசலை ஊற்றவும். நன்கு கொதிக்க விடவும். 3 நிமிடங்கள் கொதித்ததும் பருப்பை மசித்து சேர்க்கவும். ஒரு கொதி வந்ததும் இறக்கி சூடான சாதத்தோடு பரிமாறவும்.

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!