தேவையானவை:- பேபிகார்ன் - 4, வேகவைத்த துவரம்பருப்பு - 1 டேபிள் ஸ்பூன், பெரிய வெங்காயம் - 1 நீளமாக நறுக்கவும், தக்காளி - 1 துண்டுகளாக்கவும்., பச்சை மிளகாய் - 1 இரண்டாக வகிரவும், மஞ்சள் தூள் - 1 சிட்டிகை, எண்ணெய் , நெய் - 2 டீஸ்பூன், உளுந்து - 1/2 டீஸ்பூன், சோம்பு - 1/3 டீஸ்பூன், சீரகம் - 1/2 டீஸ்பூன், மிளகு - 1 டீஸ்பூன், பட்டை - 1 இன்ச், இலை - இன்ச், கல்பாசிப்பூ - 1 இன்ச், ஏலக்காய் - 1, கருவேப்பிலை - 1 இணுக்கு., கொத்துமல்லி தழை - 1 டீஸ்பூன்., உப்பு - 1 டீஸ்பூன், பால் - 1 டேபிள் ஸ்பூன்.
செய்முறை:-
பேபிகார்னை மெல்லிய வட்டத் துண்டுகளாக வெட்டவும். ஒரு பானில் எண்ணெய்/ நெய் ஊற்றி உளுந்து, சோம்பு, சீரகம்., மிளகு, கல்பாசிப்பூ., பட்டை., இலை., ஏலக்காய் போட்டு தாளிக்கவும். அதில் வெங்காயம், தக்காளி., கருவேப்பிலை., பச்சை மிளகாய், பேபிகார்ன் போட்டு நன்கு வதக்கவும். துவரம்பருப்பை நன்கு மசித்து 3 கப் தண்ணீர் ஊற்றி உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து பானில் ஊற்றவும். கொதி வந்ததும் சிம்மில் மூடி போட்டு 7 நிமிடம் வேக விடவும். பால் ஊற்றி கொத்துமல்லித்தழை சேர்த்து வறுத்த அரிசி வத்தல்களுடன் பரிமாறவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக