பொரி மசால்
தேவையானவை:- பொரி - 1 கப், காரட் 1 - துருவியது , பெரிய வெங்காயம் - 1/4 பொடியாக அரிந்தது, மல்லித்தழை - 2 டீஸ்பூன் பொடியாக அரிந்தது, மிளகாய்ப் பொடி - கால் டீஸ்பூன், சாட் மசாலா - கால் டீஸ்பூன். பொரியில் உப்பு இருக்கும் என்பதால் சேர்க்க வேண்டாம்.
செய்முறை:- பொரியில் துருவிய காரட், பெரிய வெங்காயம், மல்லித்தழை, மிளகாய்ப்பொடி, சாட் மசாலா கலந்து உபயோகிக்கவும். கலந்தவுடன் சாப்பிட வேண்டும் . கலந்து வைத்தால் நமத்து விடும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக