அப்பளம்
தேவையானவை:- உளுந்தமாவு - 2 கப், சீரகம் - கால் டீஸ்பூன், பெருங்காயம் - 1 துண்டு, எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன், தண்ணீர் - தேவையான அளவு.
செய்முறை :- உளுந்தமாவில் பெருங்காயத்தையும் உப்பையும் நீரில் கரைத்து ஊற்றி கெட்டியாகப் பிசையவும். எண்ணெய் தடவி மடக்கி மடக்கி சப்பாத்திக் கல்லில் அடித்து நீளமான உருளைகளாக உருட்டவும். இதை மருந்து பாட்டில் மூடி அளவு துண்டங்களாக வெட்டி வைக்கவும். ஒவ்வொன்றையும் குட்டிக் குட்டிப் பூரியாகத் தேய்க்கவும். இரண்டு குட்டிப் பூரிகளை எடுத்து ஒன்று சேர்த்து உளுந்து மாவு தூவிப் பெரிய வட்டமாகத் தேய்த்து நிழற்காய்ச்சலாக உலரவைத்து எடுத்து வைக்கவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக