வெஜ் சேமியா சூப்
தேவையானவை:- சேமியா – கால் கப், பொடியாக அரிந்த காய்கறிக் கலவை – 1 கப் ( கேரட், பீன்ஸ், பட்டாணி, காலிஃப்ளவர் ) பால் – ஒரு கப், வொயிட் பெப்பர் பொடி – அரை டீஸ்பூன், வெண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன், ஆல் பர்ப்பஸ் மாவு – 1 டீஸ்பூன், உப்பு – அரை டீஸ்பூன், தக்காளி சாஸ் – 1 டேபிள் ஸ்பூன், கொத்துமல்லித்தழை – ஒரு டீஸ்பூன்.
செய்முறை:- சேமியாவையும் காய்கறிகளையும் இரண்டு கப் தண்ணீரில் வேகப்போடவும். வெந்ததும் உப்பு சேர்த்து இறக்கி வைக்கவும். ஒரு பானில் வெண்ணெயை உருகவைத்து அதில் ஆல்பர்ப்பஸ் மாவு போட்டுப் புரட்டவும். பாலை உடனே ஊற்றிக் கட்டியில்லாமல் கிளறி வேகவைத்து இறக்கவும். இதை வெந்த வெஜ் சேமியாவில் ஊற்றி தக்காளி சாஸ், கொத்துமல்லித்தழை சேர்த்து நன்கு கலக்கிச் சூடாகப் பரிமாறவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக