சேமியா நெஸ்ட் கட்லெட்
தேவையானவை:- சேமியா – அரை கப், கேரட் – குச்சியாக நறுக்கியது ஒரு கப், கோஸ் – குச்சியாக நறுக்கியது - 1 கப், வெங்காயம் – 1 குச்சியாக நறுக்கவும். பச்சைமிளகாய் – 2 பொடியாக அரியவும். உருளைக்கிழங்கு – 2 வேகவைத்துத் தோலுரிக்கவும். இஞ்சித் துருவல் – அரை டீஸ்பூன், கொத்துமல்லித்தழை – 2 டீஸ்பூன். மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் – 1 சிட்டிகை, வெண்ணெய் – ஒரு டீஸ்பூன், அவித்த பச்சைப் பட்டாணி அல்லது அவித்த வேர்க்கடலை – அரை கப், கார்ன் ஃப்ளோர் – 2 டேபிள் ஸ்பூன். முட்டை வெள்ளைக்கரு – 2, மிளகு சீரகத்தூள் – கால் டீஸ்பூன், உப்பு – 1 டீஸ்பூன். எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு.
செய்முறை:- இரண்டு டீஸ்பூன் எண்ணெயில் வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சித்துருவல், கேரட், கோஸ், ஆகியவற்றை வதக்கவும். இதில் மஞ்சள் பொடி, முக்கால் டீஸ்பூன் மிளகாய்ப்பொடி, அரை டீஸ்பூன் உப்பு சேர்த்து நன்கு வதக்கி உருளையை மசித்துப் போடவும். ஆறியவுடன் கொத்துமல்லித்தழையையும் வெண்ணையையும் சேர்த்து நன்கு பிசைந்து எலுமிச்சை அளவு உருண்டை எடுத்து நன்கு சேமியாவில் புரட்டிக் கிண்ணங்களாகச் செய்யவும். இன்னொரு கப்பில் முட்டை வெள்ளைக் கருக்களை எடுத்துக் கால் டீஸ்பூன் உப்பு, மிளகு சீரகப் பொடி போட்டு நன்கு அடித்து வைக்கவும். சேமியா கப்களை இதில் நன்கு முக்கி எடுத்துக் காயும் எண்ணெயில் பொரித்தெடுக்கவும். பறவைக்கூடு தயார். கார்ன்ஃப்ளோரில் உப்பு சேர்த்து கெட்டியாகக் கரைக்கவும். வெந்த பட்டாணி அல்லது வேர்க்கடலையை இதில் தோய்த்து எண்ணெயில் பொரித்தெடுத்து சேமியா நெஸ்டில் வைத்துப் பரிமாறவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக