லெமன் சேமியா
தேவையானவை:- சேமியா - 1 பாக்கெட், பெரிய வெங்காயம் - 1, காரட் -சின்னம் 1, பட்டாணி - ஒரு கைப்பிடி, பச்சைமிளகாய் - 1,உப்பு - அரை டீஸ்பூன், மஞ்சள் தூள் - 1 சிட்டிகை, எலுமிச்சைச் சாறு - அரை மூடி. தாளிக்க :- எண்ணெய் - 2 டீஸ்பூன், கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு தலா - அரை டீஸ்பூன்.
செய்முறை:- வெங்காயம், பச்சைமிளகாய், காரட்டை நீளமாக நறுக்கி வைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றிக் கடுகு, உளுந்து, கடலைப்பருப்பைத் தாளித்து வெங்காயம், பச்சைமிளகாய், பட்டாணி, கேரட்டைப் போடவும். நன்கு வதங்கியதும் மஞ்சள் தூள், உப்புச் சேர்த்து இரண்டு கப் தண்ணீர் ஊற்றிக் கொதிக்க விடவும். தண்ணீர் கொதி வந்ததும் சேமியாவைச் சேர்த்துக் கிளறி தீயை அடக்கி சிம்மில் வைத்து மூடி போட்டு இரு நிமிடங்கள் வேகவிடவும். அடுப்பை அணைத்து மூடியைத் திறந்து எலுமிச்சைச் சாறு பிழிந்து நன்கு கலக்கித் திரும்ப மூடி வைக்கவும். தக்காளி சாஸ் அல்லது தேங்காய்ச் சட்னியுடன் பரிமாறவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக