எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 28 செப்டம்பர், 2023

குனாஃபா

குனாஃபா

தேவையானவை:- சேமியா – 300 கிராம், வெண்ணெய் – அரை கப், பால் – ஒருகப் + கால் கப், சீனி – ஒரு டேபிள் ஸ்பூன், கார்ன் ஃப்ளோர் – அரை டேபிள் ஸ்பூன், ரோஸ் வாட்டர் – 2 டீஸ்பூன், ஏதேனும் ஒரு சீஸ் – 100 கிராம், கேசரி கலர் – 1சிட்டிகை, சர்க்கரைப் பாகு தயாரிக்க :- தண்ணீர் – அரை கப், சீனி – அரை கப். பொடித்த பிஸ்தா – 2 டேபிள் ஸ்பூன்.

செய்முறை:- இரண்டு நான் ஸ்டிக் பேன்களில் தலா ஒரு டீஸ்பூன் வெண்ணெயைத் தடவி வைக்கவும். ஒன்றை விட மற்றொன்று பெரிதாக இருக்க வேண்டும். சேமியாவை ஒரு பெரிய பேஸினில் கொட்டி நான்கு டேபிள் ஸ்பூன் வெண்ணையை உருக்கி ஊற்றி கேசரி கலரையும் போட்டு நன்கு கிளறவும். சிறிய பேனில் தடவிய வெண்ணெயின் மேல் பாதி சேமியாவை நன்கு பரப்பி ஒரு கிண்ணம் அல்லது தட்டினால் நன்கு அமுக்கி வைக்கவும். ஒரு பானில் ஒரு கப் பாலைக் காய்ச்சி சீனி சேர்க்கவும். அது கொதிக்கும்போது கால் கப் பாலில் கார்ன்ஃப்ளோரைக் கரைத்து ஊற்றவும். அது கெட்டியாகும்போது சீஸைத் துண்டுகள் செய்து போட்டு ரோஸ் வாட்டர் கலந்து நன்கு கரைந்ததும் இறக்கவும். இதைப் பானில் பரத்திய சேமியாவின் மேல் பானின் ஓரங்களில் படாமல் பரப்பவும்.  எல்லாவற்றையும் ஊற்றிப் பரப்பி மிச்ச சேமியாவை அதன் மேல் போட்டு லேசாக சீராக அமுக்கவும். இதனைப் பானோடு அப்படியே அடுப்பில் ஒரு நிமிடம் ஹை ஃப்ளேமில் வைத்து அதன் பின் அடுப்பில் ஒரு அப்பளம் சுடும் ஸ்டாண்ட் வைத்து அதன் மேல் சிம்மில் பத்து நிமிடங்கள் வைக்கவும். ஒரு புறம் சிவந்ததும் வெண்ணெய் தடவிய இன்னொரு பானில் மாற்றி இதே போல் ஒருநிமிடம் ஹை ஃப்ளேமில் வைத்து அதன் பின் அப்பள ஸ்டாண்டில் வைத்து சிம்மில் பத்து நிமிடங்கள் வைக்கவும். அரை கப் தண்ணீரில் அரை கப் ஜீனி போட்டுக் கம்பிப் பாகு காய்ச்சவும். குனாஃபாவினை அடுப்பிலிருந்து இறக்கியதும் அதில் இந்த ஜீராவை சீராக ஊற்றி பொடித்த பிஸ்தாவைத் தூவி அலங்கரித்துத் துண்டுகள் செய்து பரிமாறவும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...