11.ரஸ்க் ஜாமூன்
தேவையானவை:- மினி ரஸ்க் – 20. சீனி – ஒரு கப், ரோஸ் எசன்ஸ் – சிறிது, ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன். நெய் – சிறிது.
செய்முறை:- சீனியுடன் கால் கப் நீர் சேர்த்து ஜீரா தயாரிக்கவும். ஜீரா கொதிக்கும்போது ஏலக்காய் தூள் சேர்த்து இறக்கி லேசாக ஆறியதும் ரோஸ் எசன்ஸ் சேர்க்கவும். ரஸ்குகளின் மேல் நெய்யைத் தடவி ஒரு தோசா பானில் போட்டு லேசாகப் பொன்னிறமானதும் ஒரு ட்ரேயில் எடுத்து அடுக்கவும். வெதுவெதுப்பான ஜீராவை ஊற்றி ரஸ்க் ஊறியதும் பரிமாறவும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக