எதேச்சையா ஒரு ஞாயித்துக் கிழமை அன்னிக்கு சீக்கிரமா முழிப்பு வந்துருச்சு.
நமக்கெல்லாம் திங்கக்கிழமை அன்னிக்குத்தானே சூப்பரா தூக்கம் வரும்.
சரின்னு சீக்கிரமா வேலை எல்லாம் முடிச்சாச்சு.. டிவியில் பார்த்த
ப்ரோக்ராமே பார்த்த மாதிரி இருந்துச்சு. கம்ப்யூட்டர் லீவு நாள்ல
கிடைக்காது.. சரி என்ன பண்ணலாம் பொழுதே போகலையேன்னு யோசிச்சப்ப எதிர்
ப்ளாட்டில் இருந்து சரிகமபதநச னு ஒரு சின்னபிள்ளையோட கணீர் குரலோட பாட்டு
கேட்டுச்சு.. அட பூஜா.. பாட்டெல்லாமா பாடுறா. அந்த குட்டீஸ்க்கு மிஞ்சி
மிஞ்சிப் போனா 5 வயசு இருக்கும். பிரபல பாடகி மாதிரி அற்புதமா பாடினா..
சமையல் வாசனை வேற அவங்க வீட்டில இருந்து மூக்கை துளைச்சுச்சு..
ஞாயித்துக்கிழமையும் அதுவுமா அவங்க என்ன செய்யிறாங்கண்ணு பார்க்கலாம்னு
போனேன்.. அடுத்தவங்க வீட்டுல என்ன செய்யிறாங்கன்னு பார்க்கிறதுன்னா
நமக்கெல்லாம் எவ்வளவு சந்தோஷம்..
காலிங் பெல் அடிச்சவுடனே பூஜா உள்ள ஓடிப் போயி.,” அம்மா பாபு அக்கா பிளிசின்னாரு” அப்பிடின்னா.. ( என் தம்பி பாபு நாங்கள் இருந்த வீட்டில் முன்பு இருந்தான். அவன் போன பின்னாடி நாங்கள் வந்து 3 வருடம் கூட ஆச்சு. இருந்தாலும் நான் பூஜாவுக்கு பாபு அக்காதான்..) போய் பூஜா சூப்பரா பாடுறாளேன்னு கேட்டா அவங்க அம்மா கீதா., அவ இப்ப ஸ்லோகம் க்ளாஸ்., பாட்டு க்ளாஸ் எல்லாம் போறான்னு சொன்னாங்க.. அவங்க கிச்சன்ல அடுப்புல ஏதோ ஃப்ரை பண்ணிகிட்டு இருந்தாங்க.. அவங்க கணவர் ரகு அவங்களுக்கு உதவி செய்துகிட்டு இருந்தார். கீதா ப்ரைவேட் கன்சர்ன்ல வேலை பார்க்கிறாங்க. ரகு மாக்ஸ் ந்யூயார்க் லைஃப் இன்சூரன்ஸ்ல வேலை பார்க்கிறார். அவங்க பொண்ணு பூஜா எல் கே ஜி படிக்கிறா.. ரொம்ப சுட்டியான பொண்ணு.