VELLAIP PANIYAARAM.:-
NEEDED :-
RAW RICE - 2 CUPS (HEEPED)
URAD DHAL - AT THE TOP OF RICE AND TO FUL FILL THE 2 CUPS ( APPROXIMATELY 1/4 CUP)..
SALT - 1 TSP.
OIL - TO FRY .
METHOD :-
MIX RICE AND DHAL WASH AND SOAK FOR 2 HOURS.
GRIND WELL AS A SMOOTH BATTER ADD SALT AND BLEND WELL.
HEAT OIL IN A KADAI .
POUR A LADDLE OF BATTER IN OIL AND WHEN IT BLOW UP TRUN THE OTHER SIDE AND TAKE OUT OF OIL .
SERVE HOT WITH MILAKAAYTH THUVAIYAL OR KATHAMBA CHUTNEY.. OR VENKAAYAM THAKKAALI KETTI CHUTNEY .
OPTIONAL :- WE CAN ADD HALF TSP SUGAR AND MILK TO THE BATTER TO GET SMOOTH PANIYAARAMS..
P. N. :- IF THE PANIYAARAM COMES TOO FLAT ADD SOME IDDLIE MAVU OR DOSAI MAVU. AND IF THE PANIYAARAM COMES TOO MUCH BULGES AT THE CENTRE ADD IDIYAAPPA MAAVU OR RICE FLOUR.
THIS IS CHETTINAD SPECIAL.. AND WE SERVE IT IN EACH N EVERY FUNCTIONS N FESTIVALS..
வெள்ளைப் பணியாரம்..:-
தேவையான பொருட்கள்.. :-
பணியாரப் பச்சை ( பச்சரிசி ) - 2 ஆழாக்கு தலை தட்டி.
வெள்ளை உளுந்து - அரிசியின் மேல் கோபுரமாக ( தோராயமாக 1/4 ஆழாக்கு)
உப்பு - 1 டீஸ்பூன்
எண்ணெய் - பொறிக்க..
செய்முறை:-
அரிசி்யையும் உளுந்தையும் சேர்த்துக் கழுவி 2 மணி நேரம் ஊறவைக்கவும்.
நன்கு மையாக அரைத்து உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.
எண்ணெயைக் கடாயில் காயவைத்து மாவை ஒவ்வொரு கரண்டியாக ஊற்றி மேலெழும்பியதும் திருப்பி விட்டு சூடாக எடுத்து மிளகாய்த்துவையல்., (அ) கதம்பச் சட்னி., (அ) வெங்காயம் தக்காளி கெட்டிச் சட்னியுடன் பரிமாறவும்..
விருப்பம்:- அரை தேக்கரண்டி சீனியும் பாலும் விட்டு நன்கு மாவை அடித்து ஊற்றினால் பணியாரம் மென்மையாக வரும் .
பி. கு. :- பணியாரம் ரொம்ப தட்டையாக வந்தால் இட்லி அல்லது தோசை மாவை சிறிது சேர்த்துக் கொள்ளவும். நடுவில் ரொம்ப உப்பலாக., கனமாக வந்தால் இடியாப்ப மாவு அல்லது அரிசி மாவை சேர்க்கவும்.
இது செட்டிநாட்டின் ஸ்பெஷல் பலகாரம்.. ஒவ்வொரு பண்டிகை தினத்தன்றும்., திருமணங்களிலும் இது இடம் பெறும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக