17. தேன்கதலி அப்பம்:-
தேவையானவை:- தேன்கதலிப் பழம் – 2,
மைதா/கோதுமை – ஒரு கப், சர்க்கரை – கால் கப், உப்பு – 1 சிட்டிகை, பேக்கிங் பவுடர்
– 1 சிட்டிகை, ஏலத்தூள் – 1 சிட்டிகை. எண்ணெய் – பொரிக்கத்தேவையான அளவு.
செய்முறை:- நன்கு கனிந்த தேன்கதலிப்
பழங்களை உரித்து ஒரு பௌலில் போட்டு நன்கு மசிக்கவும். இதில் மைதா, உப்பு, பேக்கிங்
பவுடர், ஏலத்தூள்,சர்க்கரை போட்டு நன்கு கலந்து தண்ணீரை சிறிது சிறிதாகத் தெளித்து
நன்கு பிசையவும். பஜ்ஜி மாவு பதத்திற்கு வந்ததும் தண்ணீர் சேர்க்க வேண்டாம். இதைப்
பத்து நிமிடம் ஊறவைத்து கடாயில் எண்ணெயைக் காயவைத்து ஒவ்வொன்றாக ஊற்றவும்,
உப்பியதும் திருப்பி வேகவைத்துப் பொன்னிறமாக எடுக்கவும்.
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!