வெங்காயத்தாள் பச்சடி
தேவையானவை :- பாசிப்பருப்பு - 1கப், வெங்காயத்தாள் – 1 கட்டு, தக்காளி - 1, பச்சை மிளகாய் - 2. மஞ்சள்தூள் - 1 சிட்டிகை, பெருங்காயம் - 1 துண்டு. உப்பு - 1 டீஸ்பூன், புளி – 1 சுளை. தாளிக்க :- எண்ணெய் - 2 டீஸ்பூன், கடுகு, உளுந்தம்பருப்பு, சீரகம் - தலா அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை, கருவேப்பிலை - 1இணுக்கு, கொத்துமல்லித்தழை - சிறிது.
செய்முறை:- பாசிப்பருப்பை அரைகப் நீரில் போட்டு குக்கரில் ஒரு விசில் வைக்கவும். வெங்காயத்தாள், தக்காளியைப் பொடிப்பொடியாக நறுக்கி வெந்த பருப்போடு சேர்க்கவும். பச்சைமிளகாய்களைக் கீறிப் போட்டு மஞ்சள்பொடி , பெருங்காயத்துண்டு சேர்த்துவேகவிடவும்.ஒரு டம்ளர் தண்ணீரில் உப்பு புளியைக் கரைத்து ஊற்றிக் கொதிக்கவிடவும். இதில் கடுகு, உளுந்து , சீரகத்தைத் தாளித்துக் கருவேப்பிலை சேர்த்துப் பொரிந்ததும் பச்சடியில் சேர்க்கவும். பெருங்காயத்தூளையும் பொடியாக அரிந்த கொத்துமல்லியையும் போட்டு நன்கு கலக்கிவிட்டு சூடான இட்லிகளோடு பரிமாறவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக