பொன்னாங்கண்ணிப் பொரியல்
தேவையானவை:- பொன்னாங்கண்ணிக்கீரை - 1 கட்டு ( கழுவி ஆய்ந்து பொடியாக நறுக்கவும்), பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கவும்), வரமிளகாய் – 1, கடுகு - 1 டீஸ்பூன், உளுந்து - 1 டீஸ்பூன், உப்பு - 1/4 டீஸ்பூன், எண்ணெய் - 1 டீஸ்பூன், வேகவைத்த துவரம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்.
செய்முறை :- பானில் எண்ணெயைக் காயவைத்துக் கடுகு போடவும். அது வெடித்தவுடன் உளுந்து போடவும். அது சிவந்தவுடன் ரெண்டாகக் கிள்ளிய மிளகாய்., வெங்காயம் போடவும். ஒரு நிமிடம் வதக்கிய பின் பொன்னாங்கண்ணிக் கீரையைச் சேர்க்கவும். 3 நிமிடங்கள் வதக்கியபின் உப்பு சேர்க்கவும். மெல்லியதீயில் இன்னும் 5 நிமிடங்கள் வேகவைத்து வெந்த பருப்பைப் போட்டு நன்கு கலந்து இறக்கவும்.
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!