சோம்பு இலை ரொட்டி
தேவையானவை :- அரிசி மாவு – 1 கப், சோம்பு இலை – ஆய்ந்தது ½ கப், கடலைப் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன், பெரிய வெங்காயம் – 1 பொடியாக நறுக்கவும், பச்சை மிளகாய் 2, சீரகம் – ஒன்றரை டீஸ்பூன், கேரட் திருகியது – 1 டேபிள் ஸ்பூன், பெருங்காயம் – கால் டீஸ்பூன், உப்பு – ½ டீஸ்பூன் , தயிர் – அரை கப், எண்ணெய் – 20 மிலி.
செய்முறை:- கடலைப்பருப்பை கழுவிப் பத்து நிமிடம் ஊறவைக்கவும். அரிசி மாவை ஒரு பேஸினில் போட்டுப் பெருங்காயம், உப்பு, சீனியைப் போட்டுக் கலக்கவும். சோம்பு இலையைப் பொடியாக அரிந்து போடவும். பச்சைமிளகாய் சீரகத்தைக் கொரகொரப்பாக இடித்துச் சேர்க்கவும். பொடியாக அரிந்த வெங்காயம், தயிரைச் சேர்க்கவும். கடலைப்பருப்பை நீரில்லாமல் போட்டு நன்கு பிசைந்து பத்து நிமிடம் ஊறவைக்கவும். எண்ணெய் தடவிய தோசைக்கல்லில் எலுமிச்சை அளவு மாவை எடுத்து ரொட்டிகளாக தட்டிச் சுட்டெடுத்துத் தக்காளிச் சட்னியுடன் பரிமாறவும்.
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!