சுக்குடிக்கீரை கழனிச்சாறு
தேவையானவை:- மணத்தக்காளிக் கீரை - ஒரு கட்டு, சின்ன வெங்காயம் - 10 தோலுரித்து இரண்டாக நறுக்கவும், அரிசி களைந்த கெட்டித்தண்ணீர் - 2 கப், எண்ணெய் - 2 டீஸ்பூன், உளுந்து - 1 டீஸ்பூன்,சீரகம் - 1/2 டீஸ்பூன், வரமிளகாய் - 1 இரண்டாகக் கிள்ளி வைக்கவும், உப்பு - 1/2 டீஸ்பூன்
செய்முறை:- கீரையை நன்கு கழுவி ஆய்ந்து நறுக்கி வைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி உளுந்து போட்டு சிவந்ததும், சீரகம் போட்டுப் பொறிந்ததும், வரமிளகாய் சின்ன வெங்காயம் தாளிக்கவும். ஒரு நிமிடம் வதக்கிய பின் கீரையை சேர்க்கவும். 2 நிமிடம் கீரையை வதக்கியபின் அரிசி களைந்த கெட்டித் தண்ணீரை ஊற்றவும். கொதித்து வரும்போது சிம்மில் 5 நிமிடம் வைக்கவும். வெங்காயமும் கீரையும் வெந்தபின் உப்பு சேர்த்து இறக்கவும். இதை சாதத்தில் ஊற்றியும் சாப்பிடலாம். சூப் போல அப்படியேயும் குடிக்கலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக