வெந்தயத் தோசை
தேவையானவை:- இட்லி அரிசி – 2 கப், வெந்தயம் – கால் கப், உப்பு – ஒரு டீஸ்பூன்.
செய்முறை:- இட்லி அரிசியையும், வெந்தயத்தையும் தனித்தனியாகக் கழுவி ஊறவைக்கவும். இரண்டு மணி நேரத்துக்குப் பிறகு முதலில் வெந்தயத்தை முக்கால் பங்கு அரைத்து அதன் பின் இட்லி அரிசியையும் சேர்த்து அரைக்கவும். உப்புச் சேர்த்துக் கரைத்து எட்டுமணி நேரம் புளிக்க விடவும். தோசைக்கல்லை எண்ணெய்த் துணியால் துடைத்துத் தோசைகளாகச் சுட்டுப் பூண்டுப் பொடியோடு பரிமாறவும்.
இது டயபடிஸ் உள்ளவர்கள் சாப்பிட ஏற்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக