முட்டைக்கோஸ் கூட்டு
தேவையானவை:-முட்டைக்கோஸ் – 200 கி, துவரம்பருப்பு + பாசிப்பருப்பு – தலா 2 டீஸ்பூன், பச்சைமிளகாய் – 1, பெரியவெங்காயம் – பாதி, உப்பு – அரை டீஸ்பூன், தாளிக்க:- எண்ணெய் – ஒரு டீஸ்பூன், உளுந்து, சீரகம் – தலா அரை டீஸ்பூன், கருவேப்பிலை – 1 இணுக்கு.
செய்முறை:- முட்டைக்கோஸையும் வெங்காயத்தையும் நைஸாக அரியவும். ஒரு ப்ரஷர் பானில் துவரம்பருப்பு, பாசிப்பருப்பைப் போட்டு அரை கப் நீரூற்றி, வகிர்ந்த பச்சைமிளகாய், அரிந்த கோஸ், வெங்காயத்தைப் போடவும். இரண்டு விசில் வந்ததும் இறக்கி உப்பு சேர்த்து உளுந்து சீரகம், கருவேப்பிலை தாளித்து மசித்துவிட்டு உபயோகிக்கவும். பருப்புகளை அரைமணி முன்னேயே ஊறப்போட்டால் ஒரு விசில் வைத்தால் போதும். இது குடல் புண்ணை ஆற்றும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக