எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 10 ஏப்ரல், 2023

பருப்புத் துவையல்

பருப்புத் துவையல்


தேவையானவை:- துவரம்பருப்பு – 2 டேபிள் ஸ்பூன், தேங்காய் – 1 சில், வரமிளகாய் – 1, உப்பு – கால் டீஸ்பூன், பூண்டு – 1 பல்

செய்முறை:- துவரம்பருப்பை வெறும் வாணலியில் வாசம்வரும்வரை வறுக்கவும். இத்துடன் மிளகாயையும் சேர்த்து வறுக்கவும். ஆறியதும் தேங்காய்ச்சில், உப்புப் போட்டு மிக்ஸியில் கொரகொரப்பாக அரைக்கவும். கடைசியாக உரித்த பூண்டைப் போட்டு ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். 

இது ரசம்சாதம் & உடைகஞ்சிக்குத் தொட்டுக் கொள்ள ஏற்றது. காய்ச்சலின் போது ஏற்படும் நாக்கசப்பை நீக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...