மருந்துக் குழம்பு
தேவையானவை:- சுக்கு – 1 துண்டு, மிளகு – ஒரு டீஸ்பூன், திப்பிலி – 1 துண்டு, அதிமதுரம் -1 துண்டு, சித்திரத்தை – 1 துண்டு, சீரகம்- 1 டீஸ்பூன், வரமல்லி – இரண்டு டீஸ்பூன் , சின்ன வெங்காயம் -15, பூண்டு – 10 பல், தக்காளி – 1, உப்பு – ஒரு டீஸ்பூன், புளி – 1 நெல்லி அளவு, மஞ்சள்தூள் – 1 சிட்டிகை, நல்லெண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்.
செய்முறை:- சுக்கு, திப்பிலி, அதிமதுரம், சித்திரத்தையை வெறும் வாணலியில் வறுத்து இடித்துப் பொடிக்கவும். மிளகு, சீரகம், தனியாவையும் வறுத்துப் பொடிக்கவும். அடி கனமான பாத்திரத்தில் நல்லெண்ணெய் ஊற்றி சுத்தம் செய்த சின்னவெங்காயம், பூண்டு, தக்காளியைப் போட்டு நன்கு வதக்கவும். இதில் உப்புப் புளியைக் கரைத்து ஊற்றிக் கொதிக்க விடவும். கொதிக்கும்போது மஞ்சள்தூள், வறுத்து அரைத்த பொடிகளைச் சேர்த்து எண்ணெய் பிரியும்வரை வைக்கவும். கருவேப்பிலை போட்டு இறக்கவும்.
சூடாக சாதத்தில் போட்டுச் சாப்பிட சளியை நீக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக