மினி பஃப்ஸ்
தேவையானவை :- ஆல் பர்ப்பஸ் மாவு/மைதா – 2 கப், வேகவைத்த கொண்டைக் கடலை – கால் கப், மினி மீல்மேக்கர்/சோயா சங்க்ஸ் – கால் கப், பெரிய வெங்காயம் – 1, பச்சை மிளகாய் – 2, இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன், மிளகாய்ப் பொடி – அரை டீஸ்பூன், மல்லிப் பொடி – அரை டீஸ்பூன், கரம் மசாலா பொடி – அரை டீஸ்பூன், எண்ணெய் – 1 கப், அரிசி மாவு – 1 டேபிள் ஸ்பூன், எண்ணெய் – 2 டீஸ்பூன், தண்ணீர் – 2 டீஸ்பூன்.பேக்கிங் பவுடர் – 1 டீஸ்பூன், உப்பு – அரை டீஸ்பூன், டால்டா – 2 டீஸ்பூன்.
செய்முறை:-
மைதாவுடன் பேக்கிங் பவுடரையும் உப்பையும் சேர்த்து நன்கு கலந்து தண்ணீர் தெளித்துப் பிசைந்து கடைசியில் டால்டா சேர்த்துப் பிசைந்து எண்ணெய் தடவி நான்கு மணி நேரம் ஊறவைக்கவும். சோயா சங்க்ஸை வெந்நீரில் போட்டு அலசிப் பிழிந்து வைக்கவும். ஒரு பானில் சிறிது எண்ணெய் ஊற்றி பொடியாக அரிந்த பச்சை மிளகாய், பெரிய வெங்காயம் போட்டு வதக்கவும். அதில் இஞ்சிபூண்டு பேஸ்ட் போட்டு வதக்கி கொண்டக்கடலை சோயா சங்க்ஸ், உப்பு, மிளகாய்ப் பொடி, மல்லிப் பொடி, கரம் மசாலாப் பொடி போட்டு நன்கு வதக்கி லேசாக தண்ணீர் தெளித்து வேகவைத்து இறக்கவும். அரிசி மாவில் 2 டீஸ்பூன் எண்ணெயும் தண்ணீரும் சேர்த்துக் குழைத்து வைக்கவும். பிசைந்த மைதாவில் ஒரு பெரிய உருண்டை எடுத்து மைதா மாவில் புரட்டி நன்கு பெரிய சப்பாத்தியாக சதுர அளவில் தேய்க்கவும். அதில் அரிசி எண்ணெய் பேஸ்டைத் தடவி செவ்வகமாக மடக்கி திரும்பத் தேய்க்கவும். திரும்ப அரிசி மாவு பேஸ்டைத் தடவி செவ்வகமாக மடக்கி நீளமாகத் தேய்க்கவும். அதை இரண்டாக வெட்டி உள்ளே மசாலாவை ஸ்டஃப் செய்து ஓரங்களை ஒட்டவும். கனமான தோசைக்கல்லைக் காயவைத்து 1 டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி இரண்டு பஃப்ஸ்களையும் வேகவிடவும். அப்பளம் எடுக்கும் குறடினால் எல்லாப் பக்கமும் திருப்பி வேகவைத்துப் பொன்னிறமானதும் எடுத்து தக்காளி சாஸுடன் பரிமாறவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக