ஜவ்வரிசி ஊத்தப்பம்
தேவையானவை:- புழுங்கல் அரிசி – 2 கப், உளுந்து – அரை கப், ஜவ்வரிசி – அரை கப், பெரிய வெங்காயம் – 1 பொடியாக நறுக்கவும். பச்சை மிளகாய் – 1 பொடியாக நறுக்கவும். எண்ணெய் – தேவையான அளவு. கடுகு – கால் டீஸ்பூ,, உளுந்து – கால் டீஸ்பூன். உப்பு – அரை டீஸ்பூன்
செய்முறை :- புழுங்கல் அரிசி உளுந்தைக் களைந்து இரண்டு மணி நேரம் ஊறவைத்து முதல்நாளே அரைத்து உப்பு சேர்த்துக் கரைத்து வைக்கவும். மறுநாள் ஜவ்வரிசியை சிறிது நேரம் ஊறவைத்து மாவில் சேர்த்து எண்ணெயில் கடுகு உளுந்து வெங்காயம் பச்சைமிளகாய் தாளித்துக் கொட்டவும். நன்கு கரைத்து தோசைக்கல்லில் ஊத்தப்பங்களாகச் சுட்டு இருபுறமும் நன்கு வேகவைத்து எடுக்கவும். பாசிப்பருப்புப் பச்சடியுடன் பரிமாறவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக