சாபுதானா கிச்சடி
தேவையானவை:- ஜவ்வரிசி – 1 கப், எண்ணெயும் நெய்யும் கலந்து – 1 டேபிள் ஸ்பூன், பெருங்காயத்தூள் – 1 சிட்டிகை, சீரகம் – ½ டீஸ்பூன், பச்சைமிளகாய் – 2 இரண்டாக கீறவும்., வேர்க்கடலை – 1 டேபிள் ஸ்பூன், கடலைப்பருப்பு – ½ டேபிள் ஸ்பூன், உளுந்து – 1 டீஸ்பூன், வரமிளகாய் – 1 இரண்டாக கிள்ளவும்., இஞ்சி – 1 இன்ச் - துருவவும்., ( பனீர் – 20 கி துண்டுகளாக்கியது, விரும்பினால் சேர்க்கவும் ), உருளைக்கிழங்கு – 1 சிறியது, உப்பு – ½ டீஸ்பூன், தேங்காய்த் துருவல் – 1 டேபிள் ஸ்பூன், கொத்துமல்லி, கருவேப்பிலை – பொடியாக அரிந்தது 1 டீஸ்பூன்.
செய்முறை:- ஜவ்வரிசியைக் கழுவி சிறிது தண்ணீர் ஊற்றி ஒரு மணிநேரம் ஊறவைக்கவும். உருளையைத் தோல்சீவி சதுரத் துண்டுகளாக்கவும், பனீரையும் சதுரத் துண்டுகளாக்கவும். கடாயில் எண்ணெயையும் நெய்யையும் சூடாக்கி உருளையும் பன்னீரும் பொன்னிறமாகும்வரை வதக்கி ஒரு தட்டில் எடுத்து வைக்கவும்.. அதே எண்ணெயில் சீரகம், பெருங்காயத்தூள், பச்சைமிளகாய், வரமிளகாய், இஞ்சி, வேர்க்கடலை, கடலைப்பருப்புப் போட்டுத் தாளிக்கவும். ஊறவைத்த ஜவ்வரிசியை உப்பு சேர்த்து ( விரும்பினால் சிறிது மிளகும் சேர்த்து ) கரண்டியால் நன்கு கிளறி சிறிது தண்ணீர் ஊற்றி மெல்லிய தீயில் மூடி போட்டு வேக விடவும். ஜவ்வரிசி நன்கு கண்ணாடி போல் வெந்ததும் உருளை, பனீர்துண்டுகள் தேங்காய்த் துருவல் சேர்த்துக் கிளறி கருவேப்பிலை கொத்துமல்லி தூவிப் பரிமாறவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக