பிசினரிசி உப்புப் புட்டு
தேவையானவை:- பச்சரிசி – 2 ஆழாக்கு, பாசிப்பருப்பு – ¼ ஆழாக்கு, பிசினரிசி – ¼ ஆழாக்கு, தேங்காய்த் துருவல் – 1மூடி, உப்பு – 1/3 டீஸ்பூன், எண்ணெய் – 1 டீஸ்பூன், கடுகு – ½ டீஸ்பூன், உளுந்து – ½ டீஸ்பூன், வரமிளகாய் – 1, கருவேப்பிலை – 1 இணுக்கு, வெங்காயம் பொடியாக அரிந்தது – ஒரு டேபிள் ஸ்பூன்.
செய்முறை:- பாசிப்பருப்பை வெதுப்பி மிக்ஸியில் ஒன்றிரண்டாக உடைக்கவும். பச்சரிசியை ஊறவைத்து வடிகட்டி அரைத்துச் சலிக்கவும். பிசினரிசியைக் கழுவி பச்சரிசி பாசிப்பருப்போடு பிசறி இட்லிப் பாத்திரத்தில் துணி போட்டு ஆவியில் 10 நிமிடம் வேக விடவும். ஆறியதும் உதிர்த்துக் கொள்ளவும். கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெயைக் காயவைத்து அதில் கடுகு போட்டு வெடித்ததும் உளுந்து போட்டு சிவந்ததும் வரமிளகாயை இரண்டாகக் கிள்ளிப் போடவும். பின் வெங்காயம், கருவேப்பிலை சேர்த்து வாசமாக வதக்கி புட்டைச் சேர்க்கவும். உப்புத் தூவிக் கிளறி தேங்காய்ப்பூவைச் சேர்த்து இறக்கிப் பரிமாறவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக