ஜாலர் அப்பம்
தேவையானவை:- கோதுமை மாவு – 2 கப், முட்டை – 1, தேங்காய் – பாதி, உப்பு - 1 சிட்டிகை, சீனி – கால் கப். எண்ணெய் – 30 மிலி, ஜாலர் கோன்.
செய்முறை:- தேங்காயைத் துருவி இரண்டு கப் பால் எடுக்கவும். இதில் இரண்டு முட்டைகளை உடைத்து ஊற்றி ஒரு சிட்டிகை உப்பு, கால் கல் சீனி சேர்த்து நன்கு கலக்கவும். கோதுமை மாவைச் சிறிது சிறிதாகச் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்தில் நன்கு கரைக்கவும். நான் ஸ்டிக் தவாவை சூடு பண்ணி எண்ணெய் தடவி ஜாலர் கோனில் மாவை ஊற்றி வட்ட வட்டமாக மாவு விழும்படி சுழற்றவும். முழுவதும் வலைப்பின்னல் போல வந்ததும் நிறுத்தவும். எண்ணெய் தடவி ஒருபுறம் வெந்ததும் மறுபுறம் திருப்பிப் போட்டு எடுத்து தேன் தடவி சுருட்டிப் பரிமாறவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக