சாபுதானா/ஐந்தரிசிப் பணியாரம்
தேவையானவை :- பச்சரிசி - 1/ கப், துவரம் பருப்பு - 1/2 கப், பாசிப்பருப்பு - ½ கப், வெள்ளை ரவை - ¼ கப், ஜவ்வரிசி - 1/4 கப், வெல்லம் - 300 கி, தேங்காய்த் துருவல் - 1/2 கப், ஏலக்காய் – 3, எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு.
செய்முறை :- பச்சரிசி, துவரம்பருப்பு, பாசிப்பருப்பு, ஜவ்வரிசி ஆகியவற்றைக் கழுவித் தனித்தனியாக ஊறவைக்கவும். 2 மணி நேரம் கழித்து கிரைண்டரில் போட்டு ஆட்டவும். அதில் ரவை, வெல்லம், ஏலக்காய், தேங்காய்த் துருவல் போட்டு விழுதாக ஆட்டி எண்ணெயைக் காயவைத்துப் பணியாரங்களாகச் சுட்டு எடுக்கவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக