9.துலும்பா
தேவையானவை:- மைதா – முக்கால் கப், வெண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன், தண்ணீர் – அரை கப் + அரை கப், சீனி – முக்கால் கப், எலுமிச்சை சாறு – சில துளிகள், கார்ன் ஸ்டார்ச் – 1 டீஸ்பூன், ரவை – 1 டீஸ்பூன், முட்டை – 1, எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு.
செய்முறை:- ஒரு பானில் அரை கப் தண்ணீர் ஊற்றி அதில் ஒரு டேபிள் ஸ்பூன் வெண்ணெயைப் போட்டு மைதாவைச் சேர்த்து அடுப்பில் வைத்து நன்கு கிளறி இறக்கவும். இதில் கார்ன் ஸ்டார்ச், ரவை, ஒரு முட்டை போட்டு நன்கு மென்மையாக ஆகும்வரை அடிக்கவும். அரை கப் தண்ணீரில் முக்கால் கப் சீனியைச் சேர்த்து நன்கு கொதித்ததும் எலுமிச்சைச் சாறு சேர்த்து இறக்கவும். மாவை ஸ்டார் அச்சு போட்டுப் பைபிங் பையில் ஸ்பூன் செய்து காயும் எண்ணெயில் ஒரு இஞ்ச் அளவு கட் செய்து பிழியவும். பொன்னிறமாக வெந்ததும் எடுத்து சீனிப்பாகில் போட்டு மூன்று நிமிடங்கள் ஊறியபின் பரிமாறவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக