எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 30 செப்டம்பர், 2022

13. வெள்ளை முள்ளங்கிச் சட்னி

13. வெள்ளை முள்ளங்கிச் சட்னி.


 

தேவையானவை:- வெள்ளை முள்ளங்கி பெரிது – 1, தேங்காய் – 2 டேபிள் ஸ்பூன், உளுந்தம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா 2 டீஸ்பூன், சீரகம்- அரை டீஸ்பூன், வரமிளகாய் – 4, பெரிய வெங்காயம் – 1, புளி – 2 சுளை, கருவேப்பிலை – 1 இணுக்கு, உப்பு – அரை டீஸ்பூன் , எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன். கடுகு – அரை டீஸ்பூன்.


 

செய்முறை:- வெள்ளை முள்ளங்கியைத் திருகி சிறிது எண்ணெய் ஊற்றி நன்கு வதக்கவும். அதிலேயே வெங்காயத்தையும் நறுக்கிப் போட்டு வதக்கி ஆறவைக்கவும். அதே கடாயில் இரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சீரகம், கடலைப் பருப்பு, உளுந்தம்பருப்பு, வரமிளகாய் போட்டு வறுக்கவும். இதில் தேங்காய், புளி, உப்பு, போட்டு வதக்கி ஆறவைத்து இரண்டையும் சேர்த்து அரைக்கவும். ஒரு டீஸ்பூன் எண்ணெயில் கடுகு கருவேப்பிலையைத் தாளித்து சட்னியில் சேர்க்கவும்.  

 

புதன், 28 செப்டம்பர், 2022

12. மாகாளிக் கிழங்கு ஊறுகாய்

12. மாகாளிக் கிழங்கு ஊறுகாய்.


 

தேவையானவை:- மாகாளிக்கிழங்கு – கால்கிலோ, புளித்த தயிர் – 1 கப், கடுகு – 1 டீஸ்பூன், உப்பு – 1 டேபிள் ஸ்பூன், வரமிளகாய் – 8, விரலி மஞ்சள் – சிறு துண்டு.

 

செய்முறை:- மாகாளிக்கிழங்கை நன்கு கழுவி ஊறவைத்துத் தோலை நீக்கவும். தண்டையும் நீக்கி அரை இஞ்ச் துண்டுகளாக்கவும். கடுகு, விரலிமஞ்சள், வரமிளகாயை அரைத்து உப்பு, தயிர் சேர்த்து நன்கு கலக்கி ஊறவைக்கவும்.

 

ஞாயிறு, 25 செப்டம்பர், 2022

11. ஆலு புஜியா

11. ஆலு புஜியா.


 

தேவையானவை:- உருளைக்கிழங்கு – 3 வேகவைத்து உரித்து மசித்தது. கடலை மாவு – அரை கப், உப்பு, மிளகாய்த்தூள் – தலா அரை டீஸ்பூன், பெருங்காயம் – 1 சிட்டிகை, எலுமிச்சை சாறு – அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு.

 

செய்முறை:- உருளைக்கிழங்குடன் கடலை மாவு உப்பு மிளகாய்த்தூள் மஞ்சள்தூள், எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு மென்மையாகப் பிசையவும். எண்ணெயை மிதமாகக் காயவைக்கவும். ஓமப்பொடி அச்சில் எண்ணெய் தடவி மாவைப் போட்டு வட்டமாகப் பிழிந்து மஞ்சள் கலரிலேயே வேகவைத்து எடுத்து வைத்து லேசாக நொறுக்கி விடவும்

 

புதன், 21 செப்டம்பர், 2022

10. பிடிகருணை மசியல்

10. பிடிகருணை மசியல்.


 

தேவையானவை :- கருணைக்கிழங்கு – கால் கிலோ, பச்சை மிளகாய் – 4, புளி - 1 நெல்லி அளவு, மஞ்சள் தூள் – 1 சிட்டிகை, பெரிய வெங்காயம் – 1 பொடியாக அரியவும். உப்பு – அரை டீஸ்பூன், தாளிக்க :- கடுகு – அரை டீஸ்பூன், உளுந்து – ஒரு டீஸ்பூன், சோம்பு - கால் டீஸ்பூன், கருவேப்பிலை – 1 இணுக்கு, எண்ணெய் – 4 டீஸ்பூன்.


 

செய்முறை :- கருணைக்கிழங்கை நன்கு கழுவி குக்கரில் வேகப்போட்டு தோலுரித்து மசித்துக் கொள்ளவும். எண்ணெயைக் காயவைத்து கடுகு  போட்டு வெடித்ததும் உளுந்து போட்டு சிவந்ததும்,  கருவேப்பிலை போட்டு பச்சை மிளகாய்களை நான்காக கீறிப்போடவும். லேசாக வதங்கியதும் பெரியவெங்காயத்தை தண்ணீர் போல வதக்கவும். இதில் உப்பு , மஞ்சள் பொடி போட்டு மசித்த கருணையைப் போடவும். உப்பு புளியை அரை கப் நீரில் நன்கு கரைத்து ஊற்றவும். அடிக்கடிக் கிளறிவிட்டு நன்கு  சுருண்டு வரும்போது  இறக்கவும். 

 

ஞாயிறு, 18 செப்டம்பர், 2022

9. பீட்ரூட் கோளா

9. பீட்ரூட் கோளா.

 

தேவையானவை :- பீட்ரூட் - 2, துவரம் பருப்பு - அரை உழக்கு, பெரிய வெங்காயம் - 1, அரைக்க :- வரமிளகாய் - 5, சோம்பு - அரை டீஸ்பூன், உப்பு - அரை டீஸ்பூன், எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன், தாளிக்க :- கடுகு, உளுந்து,  - தலா ஒரு டீஸ்பூன். சோம்பு - கால் டீஸ்பூன்.

 

செய்முறை:- துவரம்பருப்பைக் களைந்து ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். பீட்ரூட்டைத் தோல் சீவித் துண்டுகளாக்கி மிக்ஸியில் அரைத்து வைக்கவும். பெரிய வெங்காயத்தைப் பொடியாக அரியவும்.  ஊறவைத்த பருப்பை நீரைக் களைந்து மிளகாய், சோம்புடன் பெரு பெருவென அரைத்து வைக்கவும். எண்ணெயைக் காயவைத்துக் கடுகு உளுந்து சோம்பு தாளித்து பெரிய வெங்காயம் பீட்ரூட்டைப் போட்டு சிறிது நேரம் வதக்கவும். அதில் அரைத்த பருப்பு விழுதையும் போட்டு கிளறவும். சிம்மில் வைத்து மூடி போட்டு அவ்வப்போது கிளறி கால் மணி நேரம் வேகவைத்து உதிரியானதும் இறக்கவும்.


Related Posts Plugin for WordPress, Blogger...