அஞ்சீர் நட்ஸ் அல்வா ( அத்திப்பழ
அல்வா )
செய்முறை:- இரண்டு கப் தண்ணீரைக்
கொதிக்கவைத்து காய்ந்த அத்திப்பழங்களைச் சேர்த்து 2 நிமிடங்கள் வேகவிடவும்.
மென்மையானவுடன் தண்ணீரை வடிகட்டவும். மிக்ஸியில் வேகவைத்த அத்திப்பழங்களை மட்டும்
போட்டு சிறிது நீர் ஊற்றி அரைத்து வைக்கவும். நெய்யை அடி கனமான பாத்திரத்தில்
போட்டு பொடித்த பாதாமை சேர்த்து இரண்டு நிமிடம் கிளறவும். இதில் அரைத்த அத்திப்பழ
பேஸ்ட்., பால்பவுடர், சர்க்கரை போட்டு அரை கப் தண்ணீர் ஊற்றவும். 5 நிமிடம்
விடாமல் கிளறவும். இறுகியதும் ஏலப்பொடி தூவி இறக்கி பாதாம் துருவல் தூவிப்
பரிமாறவும்.
இதில் அடங்கி உள்ள சத்துக்கள்.
அத்திமரத்தில் பூவும் விதைகளும்
சேர்ந்தே அத்திப் பழமாக உபயோகப்படுகின்றது. இது உணவை விரைவில் ஜீரணிக்க
செய்கின்றது. மலச்சிக்கல் நீங்கும். பித்தத்தை வெளியேற்றி சுறுசுறுப்பைக்
கொடுக்கும். ஈரல் நுரையீரலையும் சுத்தம் செய்கின்றது. கால் நோய் வராது, வாய்
துர்நாற்றத்தை நீக்கும். தலைமுடியும் நீளமாக வளர்கிறது இதைக் குழந்தைகள் சாப்பிட்டால்
இரத்த உற்பத்தி அதிகரித்து உடல் சீரான வளர்ச்சி அடையும். கண்பார்வையைத்
தெளிவாக்கும் விட்டமின் ஏ, நிக்கோடினிக் அமிலம், அஸ்கார்பிக் அமிலம் போன்றவையும்
இரு மடங்கு தாது உப்புகளும் இரும்புச்சத்தும் அடங்கி இருக்கிறது. மாங்கனீசு
பொட்டாசியம் கால்ஷியம் நார்ச்சத்து அதிகம் கொண்டது. நோய் எதிர்ப்பு சக்தியையும்
அதிகரிக்கிறது. இரும்பு 2 மிகி, கால்ஷியம் 100 மிகி, புரதம் 2 கி இருக்கிறது.
பாதாமில் நார்ச்சத்தும் புரதமும் உடல்
வளர்ச்சிக்குத் தேவையான நல்ல கொழுப்பும் விட்டமின் ஈயும், மாங்கனீசும்
மக்னீசியமும் பைட்டிக் அமிலமும் அடங்கி உள்ளன.
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!