மாத்ரி
:-
தேவையானவை:-
ஆட்டா – 1 கப், மைதா – 1 கப், பேக்கிங் சோடா – 1 சிட்டிகை, உப்பு – 2 டீஸ்பூன், மிளகு
– அரை டீஸ்பூன், தயிர் – 2 டேபிள் ஸ்பூன், வெந்நீர் – 8 டேபிள் ஸ்பூன், நெய் – உருக்கியது
5 டேபிள் ஸ்பூன், எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு.
செய்முறை;-
மிளகை ஒன்றிரண்டாகப் பொடித்து ஒரு பௌலில் போடவும்.அதில் உப்பு, ஆட்டா, மைதா, பேக்கிங்
சோடா, நெய் போட்டு நன்கு கலக்கவும். தயிரையும் சேர்த்து நன்கு கலக்கி வெந்நீரை சிறிது
சிறிதாக ஊற்றி கெட்டியாகப் பிசையவும். 30 நிமிடம் ஊறவிடவும். எண்ணெயைக் காயவைத்து எலுமிச்சை
அளவு உருண்டைகள் எடுத்து கனமான தட்டைகளாகத் தட்டி ஒரு ஃபோர்க்கால் குத்தி எண்ணெயில்
பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!