அவல் புரத போகா:-
செய்முறை:-
அவல் – 2 கப், கடலைப்பருப்பு – 1 டேபிள்பூன், வேர்க்கடலை – 1 டேபிள் ஸ்பூன், பச்சை
மிளகாய் – 3, ஜவ்வரிசி- 1 டேபிள் ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கைப்பிடி, உப்பு – கால்
டீஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன், உளுந்து- 2 டீஸ்பூன், சீரகம் – கால் டீஸ்பூன், மஞ்சள்
தூள் – 1 சிட்டிகை, கொப்பரைத் துருவல் – 2 டீஸ்பூன், சீனி – கால் டீஸ்பூன். எண்ணெய்-
3 டீஸ்பூன்.
செய்முறை:-
எண்ணெயைக் காயவைத்துக் கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு, வேர்க்கடலை தாளிக்கவும். இது
சிவந்ததும் ஜவ்வரிசியைப் போட்டுப் பொரிந்ததும், வட்ட வட்டமாக நறுக்கிய பச்சைமிளகாயைச்
சேர்க்கவும், கருவேப்பிலையைப் போட்டு சீனி உப்பைச் சேர்த்து கொப்பரைத் துருவல், அவலைச்
சேர்த்துப் புரட்டவும். நன்கு புரட்டி இறக்கி நிவேதிக்கவும்.
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!