சிப்பி சோஹி
(உப்பு ) :-
தேவையானவை:-
பச்சரிசி மாவு – 2 கப், பொட்டுக்கடலை மாவு – அரை கப், தேங்காய்ப்பால் – ஒன்றரை கப்,
உப்பு – அரை டீஸ்பூன், சீப்புச் சீடைக் கட்டை – 1. எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு.
செய்முறை:-
பச்சரிசி மாவுடன் பொட்டுக்கடலை மாவைக் கலந்து வைக்கவும். தேங்காய்ப்பாலை சூடுபடுத்தி
உப்பு சேர்த்து இறக்கவும் மாவில் சிறிது சிறிதாக ஊற்றிப் பிசையவும். சீப்புச்சீடைக்
கட்டையில் சிப்பிகளாகத் தட்டி வைக்கவும். எண்ணையைக் காயவைத்து அதில் போடும்போது சிப்பிகளை
லேசாக மடக்கிப் போடவும். நன்கு பொறுபொறுவென வெந்ததும் இறக்கவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக